2020 பெப்ரவரி 26, புதன்கிழமை

பிக் பாஸ் வீட்டில் இருந்து கவின் வெளியேற்றம்? வைரலாகும் புகைப்படம்!

Editorial   / 2019 செப்டெம்பர் 12 , பி.ப. 05:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிக் பாஸ் வீட்டில் இருந்து சரவணன் வெளியேறியது போல கவினும் வெளியேறி விட்டதாக புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் 16 போட்டியாளர்களின் ஒருவரான கவின், பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற சில நாட்களிலேயே விளையாட்டு என கூறி அபிராமி, சாக்ஷி அகர்வால், ஷெரின் மற்றும் லொஸ்லியா ஆகியோரின் பின்னாடி திரிந்து கொண்டிருந்தார்.

நாளடைவில் ஷெரீனையும் அபிராமியையும் விட்டு விட்டு சாக்ஷி அகர்வாலை காதலிப்பதாக கூறி இருவரும் மாறி மாறி ப்ரொபோஸ் செய்து கொண்டனர். ஆனால் இதுவும் விளையாட்டு தான் என கூறி முடித்து விட்டு தற்போது லொஸ்லியாவை காதலித்து வருகிறார்.

இவர்களின் காதல் விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் கவினின் தாயார் கைது செய்யப்பட்டு இருந்தார்.

இதுவரை இந்த விடயம் கவினுக்கு தெரியாமல் இருந்து வந்த நிலையில் பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த சாண்டியின் மனைவி இந்த விடயத்தை போட்டுடைக்க இதனால் அவர் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.

அதுவும் சரவணனின் கண்ணை கட்டி வெளியேற்றியது போல கவினையும் வெளியேற்றியது போல புகைப்படம் ஒன்று இணையத்தில் தீயாக பரவ தொடங்கியுள்ளது.  

இது எந்த அளவிற்கு உண்மை என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .