2021 ஜனவரி 22, வெள்ளிக்கிழமை

மனந்திறந்து பாராட்டிய சமந்தா!

J.A. George   / 2020 டிசெம்பர் 02 , பி.ப. 04:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுதா கொங்கரா இயக்கத்தில், நடிகர் சூர்யா நடிப்பில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவான 'சூரரை போற்று' திரைப்படம் சமீபத்தில் வெளிவந்தது. 

ஓடிடியில் வெளியான திரைப்படங்களில் இந்தப் படம் தான் மிகப்பெரிய வசூலை குவித்த தமிழ்ப்படம். இந்த படம் மிகப் பெரிய அளவில் ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் போற்றப்பட்டது.

இந்த படத்தை பாராட்டாத சினிமா பிரபலங்களே இல்லை என்றும் கூறலாம். இந்த நிலையில் பிரபல தமிழ், தெலுங்கு நடிகை சமந்தா தனது சமூக வலைதளப் பக்கத்தில் இந்த படத்தைப் பார்த்து படக்குழுவினர்களுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

குறிப்பாக சூர்யா, சுதா கொங்காரா மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர்களுக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்து இந்த ஆண்டின் மிகச்சிறந்த திரைப்படம் என்று குறிப்பிட்டுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .