J.A. George / 2021 ஜனவரி 07 , பி.ப. 12:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹொலிவுட் மொடலான கிம் கர்தாஷியன் விவாகரத்து செய்து கொள்ளப்போவது 99 சதவீதம் உறுதியாகி விட்டதாம்.
கணவரான கன்யே வெஸ்ட்டை விவாகரத்து செய்ய பிரபல வழக்கறிஞர் லாரா வாஸரை கிம் கர்தாஷியன் ஒப்பந்தம் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஏற்கனவே இரு முறை கிம் கர்தாஷியனுக்கு இந்த வழக்கறிஞர் தான் விவாகரத்து செய்து வைத்துள்ளார்.
சுமார் 180 மில்லியன் இன்ஸ்டாகிராம் ரசிகர்களை கொண்டு சர்வதேச சூப்பர் மொடலாக திகழ்கிறார் கிம் கர்தாஷியன். அவருக்கு வயது 40.
மாடல் அழகி கிம் கர்தாஷியனின் கணவரும் 43 வயதான அமெரிக்காவின் ராப் இசை பாடகராவும் திகழும் கன்யே வெஸ்ட், கடந்த ஆண்டு, அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து, உலகளவில் கவனம் ஈர்த்தார்.
அவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு கிம் கர்தாஷியன் சம்மதம் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில், கன்யே - கிம் தம்பதியினருக்கு 4 குழந்தைகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
23 Oct 2025
23 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Oct 2025
23 Oct 2025