George / 2017 ஜூன் 07 , பி.ப. 07:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஸ்ருதிஹாசன் ‘சங்கமித்ரா’ திரைப்படத்தில் இருந்து விலகிவிட்டார். அடுத்து ‘சபாஷ்நாயுடு’ திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். ஹிந்தியில் நடித்துள்ள ‘பெஹன் ஹோகி தேரி’ திரைப்படம் 9ஆம் திகதி வெளியாகிறது.
இந்த நிலையில், சுருதிஹாசன் அறுவை சிகிச்சை செய்து தனது உதட்டை அழகுபடுத்திக் கொண்டதாக சமூக வலைத்தளங்களில் சிலர் அவரை விமர்சித்தனர்.
இதற்கு பதில் அளித்துள்ள ஸ்ருதிஹாசன், “என் உடம்பு, என் முகம், என்ன வேண்டுமானாலும் செய்வேன். யாருக்கும் பதில் சொல்லவேண்டியது இல்லை. சமூக வலைத்தளங்களில் யார் என்னைப்பற்றி என்ன எழுதினாலும் எனக்கு கவலை இல்லை. நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டியது இல்லை” என்று கூறியுள்ளார்.
அத்துடன், “ஒரு நடிகை எப்போதுமே ஒல்லியாக இருக்க முடியாது. நாங்களும் மனிதர்கள்தான். திரைப்படத்துக்காக எடையை அதிகரிப்போம். குறைப்போம். சில நேரங்களில் அது இயற்கையாகவே நடக்கும்” என்றும் கூறியுள்ளார்.
49 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
3 hours ago