2020 பெப்ரவரி 24, திங்கட்கிழமை

ரௌடி பேபிக்கு மெர்சல்

Editorial   / 2019 ஜனவரி 20 , பி.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழ் சினிமாவில் இதுவரை வெளிவந்துள்ள திரைப்படங்களில், முதல் முறையாக ‘மாரி 2’ படத்தில் இடம் பெற்ற ‘ரௌடி பேபி’ பாடல் 100 மில்லியன் பார்வைகளைக் கடந்து புதிய சாதனையைப் படைத்துள்ளது.  

இதுவரை எந்த ஒரு தமிழ்த் திரைப்படப் பாடல் காணொளியும் 100 மில்லியனைக் கடந்ததில்லை. மெர்சல் திரைப்படத்தில் இடம்பெற்ற ஆளப் போறான் தமிழன் பாடல்தான், இதுவரையில் 90 மில்லியனுக்கு அதிகமான பார்வைகளைப் பெற்று முதலிடத்தில் இருந்தது. அந்தப் பாடல் யுடியூபில் வெளியாகி 14 மாதங்கள் ஆகிறது. ஆனால், ‘மாரி 2’ திரைப்படத்தின் ‘ரௌடி பேபி’ பாடல், 100 மில்லியன் சாதனையை, வெறும் 18 நாள்களில் படைத்து சாத​ைன  புரிந்துள்ளது.  

மாரி திரைப்படத்தின் முதல் பாகத்தில், அனிருத் இசையில் வெளிவந்த டானு டானு பாடல்தான் யு டியூபில் முதலில் 50 மில்லியன் பார்வைகளைக் கடந்த பாடலாக இருந்தது. அந்தச் சாதனையை, பின்னர் மெர்சல் திரைப்படத்தின் ‘ஆளப் போறான் தமிழன்’ முறியடித்தது.  

மாரி 2 திரைப்படத்துக்கு யுவன்ஷங்கர் ராஜா இசை என்றதும், அனிருத் இரசிகர்கள், மாரி திரைப்படத்தின் அனிருத் - தனுஷ் கூட்டணி போல வருமா என்றெல்லாம் கிண்டல் செய்தார்கள். அதை முறியடித்து யுவன் - தனுஷ் கூட்டணி, மாரி 2 திரைப்பட ரௌடி பேபியில், அதை விடவும் இரண்டு மடங்கு சாதனையைப் புரிந்துள்ளது.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .