2020 ஓகஸ்ட் 03, திங்கட்கிழமை

’ரௌடி பேபி’ புதிய சாதனை (வீடியோ இணைப்பு)

Editorial   / 2019 ஜனவரி 04 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலாஜி மோகன் இயக்கத்தில், யுவன்ஷங்கர் ராஜா இசையமைப்பில், தனுஷ், சாய் பல்லவி, வரலட்சுமி மற்றும் பலர் நடித்த 'மாரி 2' திரைப்படம், கடந்த வருடம் டிசெம்பர் 21ஆம் திகதி வெளியானது. அந்தத் திரைப்படத்தில் இடம்பெற்ற 'ரௌடி பேபி' பாடல், திரைப்பட வெளியீட்டுக்கு முன்பே சூப்பர் ஹிட்டானது.

அந்தப் பாடலின் வரிகள் அடங்கிய வீடியோவுக்கு,  அமோகமான வரவேற்பு கிடைத்து, இதனால் அந்தப் பாடல், யூ-டியூபில் குறுகிய நாள்களில் 50 மில்லியன் பார்வைகளைக் கடந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை அந்தப் பாடலின் முழு வீடியோ, யூ- டியூபில் வெளியானது. குறைந்த மணி நேரங்களில், 50 இலட்சம் பார்வையாளர்களைக் கடந்து, தற்போது 10 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து, புதிய சாதனையைப் படைத்துள்ளது.

37 மணி நேரங்களில் 10 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. அத்துடன், இந்தப் பாடலுக்கு 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட லைக்குகளும் கிடைத்துள்ளன. 'ரௌடி பேபி' பாடலின் லிரிக் வீடியோ - 35 நாள்களில், 50 மில்லியன் பார்வைகள், முழுப் பாடல் வீடியோ - 24 மணி நேரத்தில் 288,000 லைக்குகள், 24 மணிநேரத்தில் 70 இலட்சம் பார்வைகள், மியூசிக்கலி அப்பில், 350,000 வீடியோக்கள் எனப் புதிய சாதனையைப் படைத்துள்ளது.

தமிழ் சினிமாப் பாடல்களில் இவையனைத்தும் புதிய சாதனை என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--