2020 ஜூலை 15, புதன்கிழமை

விஜய் படப்பிடிப்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு இடையூறா?

Editorial   / 2019 டிசெம்பர் 12 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் விஜய் நடிக்கும் படப்பிடிப்பின்போது மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இடையூறு ஏற்பட்டதா என அறிக்கை கேட்கப்பட்டுள்ளது

நடிகர் விஜய் தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். 

பெயரிடப்படாத இத்திரைப்படத்தில் படப்பிடிப்பு டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்றது. 

சில நாட்களுக்கு முன்பு சென்னை பூந்தமல்லியில் உள்ள பார்வையற்றவர்கள் படிக்கும் பள்ளியில் நடைபெற்றது. முறையான அனுமதி பெற்று படப்பிடிப்பு நடந்ததாகவே கூறப்படுகிறது. 

ஆனாலும் படப்பிடிப்பு வாகனங்களும், படக்குழுவினரின் சில கட்டுப்பாடுகளும் பார்வையற்ற மாணவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது. 

இந்தநிலையில் படப்பிடிப்பின்போது மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு இடையூறு ஏற்பட்டதா என படப்பிடிப்பு நடந்த பள்ளியின் முதல்வரிடம் மாற்றுத்திறனாளி நல வாரிய ஆணையர் அறிக்கை கேட்டுள்ளார். 

அறிக்கையின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X