2020 ஜூலை 15, புதன்கிழமை

வடிவேலுவின் பஞ்சாயத்து

Editorial   / 2020 ஜூன் 03 , மு.ப. 08:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

சக நடிகர்கள் மனோபாலா மற்றும் சிங்கமுத்து ஆகியோருக்கு எதிராக நடிகர் வடிவேலு புகார் ஒன்றை அளித்துள்ளார்.

நடிகர்கள் வடிவேலுவும், சிங்கமுத்துவும் சில காலம் முன்பு வரையில் நண்பர்களாக இருந்தனர்.

அவர்கள் இருவரும் இணைந்து நடித்த பிரபல காமெடி காட்சிகளுக்கு இப்போது வரையிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்ட நிலையில், நில மோசடி விவகாரம் தொடர்பாக இருவருக்கும் இடையேயான வழக்கும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

இந்த நிலையில், நடிகர் மனோபாலா நடத்திவரும் வேஸ்ட் பேப்பர் என்னும் யூடியூப் செனலுக்கு நடிகர் சிங்கமுத்து அண்மையில் பேட்டி அளித்திருந்தார்.

அந்தப் பேட்டியில் நடிகர் வடிவேலு தொடர்பாக மனோபாலா கேட்ட கேள்விகளுக்கு சிங்கமுத்து சில தகவல்களைப் பகிர்ந்திருந்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் வடிவேலு, அதில் தன்னைப்பற்றி தவாறான விடயங்கள் தெரிவிக்கப்பட்டதாக தென்னிந்திய நடிகர் சங்கத்தின் சிறப்பு அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X