2020 ஜூலை 12, ஞாயிற்றுக்கிழமை

வதந்தி பரப்பினார்கள்

Editorial   / 2020 மே 24 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கார் விபத்தில் சிக்கிய நேரத்தில் தன்னைப்பற்றி ஏராளமான கதைகள் வெளிவந்தாக நடிகை ஷர்மிளா மந்த்ரே தெரிவித்துள்ளார்.

“சஜ்னி” என்ற திரைப்படத்தில் அறிமுகமான பிரபல நடிகை ஷர்மிளா மந்த்ரே, தமிழில் ஆர்.மாதேஷ் இயக்கிய 'மிரட்டல்' திரைப்படத்தில் நடித்திருந்தார்.

அண்மையில் பெங்களூரில் உள்ள வசந்த் நகரில் பாலம் ஒன்றில், கார் திடீரென்று மோதியது. இதில் நடிகை ஷர்மிளா, படுகாயமடைந்தார்.

அவரது முகத்திலும் கையிலும் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது நண்பருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இருவரும் அருகிள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

விருந்தில் கலந்துகொண்டு போதையில் வந்ததால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கும் என்று செய்தி வெளியான நிலையில் ஷர்மிளா அதை மறுத்திருந்தார்.

இப்போது தான் முழுமையாகக் குணமாகி விட்டதாகக் கூறியுள்ள நடிகை ஷர்மிளா மந்த்ரே. “விபத்து நடந்த நேரத்தில், என்னைப் பற்றி பல்வேறு கதைகள் பரப்பப்பட்டன. அது எதுவும் உண்மை இல்லை. அந்த நேரத்தில், எலும்பு முறிவுகளால் பாதிக்கப்பட்டிருந்தேன். உடல் நலம் தேறினால் போதும் என்றிருந்ததால் அதுபற்றி எதுவும் சொல்லவில்லை” என்று கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .