2020 பெப்ரவரி 18, செவ்வாய்க்கிழமை

வனிதா கூட்டணியில் திடீர் குழப்பம்: வெளுத்து வாங்கும் ஷெரின்

Editorial   / 2019 செப்டெம்பர் 05 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிக்பாஸ் வீட்டில் வனிதா தலைமையில் ஒரு கூட்டணியும், கவின் தலைமையில் ஒரு கூட்டணியும் ஏற்பட்டு இரு கூட்டணியில் உள்ளவர்களும் கடந்த சில நாட்களாக மோதி வருகின்றனர். 

இதில் வனிதாவின் வாக்குவாதம் சக போட்டியாளர்கள் மட்டுமின்றி பார்வையாளர்களுக்கும் அதிருப்தியை அளித்து வருகின்றது. மீண்டும் வனிதா எப்போது வெளியேறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்து வருகின்றனர்.

வனிதாவின் மிகப்பெரிய குறையே அவர் தேவையில்லாமல் மற்றவர்கள் விஷயத்தில் தலையிடுவது, அவ்வாறு தலையிடும்போது மற்றவர்கள் பேசுவதை காது கொடுத்து கேட்காமல் தன் கருத்தை மட்டுமே கத்தி வலியுறுத்துவது என்பதுதான். 

இந்த நிலையில் ஷெரினும் தர்ஷனும் சாதாரண நட்புடன் பழகி வருவதை இருவருக்கும் ஏதோ ஒன்று இருப்பது போன்று வழக்கம்போல் வனிதா வத்திக்குச்சி வைக்கின்றார். இதனால் வனிதா கூட்டணியில் இருந்த ஷெரின் ஆவேசம் அடைகிறார். 

நான் வைத்துள்ள ரிலேஷன்ஷிப் குறித்து நீ யார்? என்று வெளுத்து வாங்கும் ஷெரின், எனக்கும் தர்ஷனுக்கும் லவ் இருக்கின்றது நீ எப்படி சொல்லலாம்? என எகிறுகிறார். தன்னுடைய அணியில் உள்ள ஒருவரே தனக்கு எதிராக திரும்புவது வனிதாவுக்கு ஒரு பின்னடைவாகவே கருதப்படுகிறது. மேலும் இருவரையும் சமாதானப்படுத்த முடியாமல் சாக்சியும் திணறுகிறார்.

இந்த நிலையில் தர்ஷனும் ஷெரினுடன் சேர்ந்து வனிதாவை வெளுத்து வாங்க, வனிதாவின் கொட்டம் இனிவரும் நாட்களில் கொஞ்சம் குறையும் என்று எதிர்பார்க்கலாம். அடுத்த வாரமாவது வனிதாவை ஒட்டுமொத்த போட்டியாளர்களும் நொமினேட் செய்து அவரை வெளியேற்றினால்தான் பிக்பாஸ் நிகழ்ச்சி அமைதியாக செல்லும் என தெரிகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .