2020 ஓகஸ்ட் 03, திங்கட்கிழமை

வருத்தப்படுகிறார் வரலட்சுமி

Editorial   / 2018 நவம்பர் 02 , பி.ப. 03:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

“போடா போடி” திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக அறிமுகமான வரலட்சுமி சரத்குமார், அதன்பிறகு மதகஜராஜா உட்பட சில திரைப்படங்களில் நடித்தார். இந்நிலையில், கடந்த சில வருடங்களாக, குறிப்பாக விக்ரம் வேதா திரைப்படத்துக்குப் பிறகு, வரலட்சுமி நிறைய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

ஆனாலும், கடைசியாக வெளியான சண்டக்கோழி 2, தீபாவளிக்கு வெளிவரவிருக்கும் சர்க்கார் உட்பட ஏராளமான படங்களில் நடித்திருந்தாலும் அவருக்கு ஒரு மனக்குறை இருக்கிறதாம்.

அதாவது, எல்லாத் திரைப்படங்களிலுமே இரண்டாவது கதாநாயகி அல்லது நெகட்டிவ் கேரக்டர், வில்லி கேரக்டர்களில் நடிக்க மட்டுமே தன்னை அழைக்கிறார்கள், தனிக் கதாநாயகி வாய்ப்பு குறைவாகவே வருகிறதாம். எனவே, இனிவரும் திரைப்படங்களில், தனக்கான கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமான தனி ஹீரோயினாக நடிக்க முடிவெடுத்து உள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--