2021 ஏப்ரல் 14, புதன்கிழமை

விஜய்யின் டபுள் ஹெட்ரிக்

George   / 2015 ஓகஸ்ட் 27 , பி.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிம்புதேவன் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள 'புலி' திரைப்படம், ஒக்டோபர் 1ஆம் திகதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜயின் இந்த திரைப்படமும் வெற்றிப்படமாக அமையும் பட்சத்தில், அவர் இரட்டை ஹெட்ரிக் படைத்த நடிகராக கருதப்படுவார் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

திரைத்துறைக்கு வந்து 20 ஆண்டுகளை கடந்துள்ள விஜய், 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். ரசிகர்களால் இளையதளபதி என்று அழைக்கப்படும் விஜய், வெற்றித் திரைப்படங்களுக்கு சமமாக தோல்வித் திரைப்படங்களையும் அளித்துள்ளார்.

இந்நிலையில் புலி திரைப்படம், செப்டெம்பர் 17ஆம் திகதி வெளியாவதாக இருந்த நிலையில் கிரபிக்ஸ் பணிகளில் திருப்தியில்லாததாலேயே திரைப்படத்தின் வெளியீடு ஒக்டோபருக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது.

எனினும், விஜயின் சென்டிமென்ட்டும் இதற்கு ஒரு காரணம் என்று தகவலறிந்தோர் கூறுகின்றனர். விஜய் நடிப்பில வெளியாகி, பெரும்வெற்றி பெற்ற திரைப்படங்கள் பெரும்பாலும் ஒக்டோபர் மாதத்திலேயே வெளியாகியுள்ளன.

புலி திரைப்படமும் அவ்வாறு வெற்றி பெற வேண்டும் என்பதனடிப்படையிலேயே, ஒக்டோபர் மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒக்டோபர் மாதத்தில் வெளியாகி பெரும்வெற்றி பெற்ற விஜய்யின் திரைப்படங்கள்.

சந்திரலேகா - அக்டோபர் 23, 1995
பிரியமானவளே - அக்டோபர் 26, 2000
திருமலை - அக்டோபர் 24, 2003
வேலாயுதம் - அக்டோபர் 26, 2011
கத்தி - அக்டோபர் 22, 2011
புலி - அக்டோபர் 01, 2015?


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X