Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
J.A. George / 2020 ஒக்டோபர் 12 , பி.ப. 12:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிக் பாஸ் 4வது சீசனில் முதல் நாளில் தொடங்கிய அனிதா சம்பத் - சுரேஷ் சக்ரவர்த்தி சண்டை மற்றும் நேற்று முன்தினம் முதல் நடந்து வரும் சனம் - பாலாஜி முருகதாஸ் சண்டை என அனைத்தும் ரசிகர்களை பரபரப்பாக வைத்திருக்கிறது.
இந்நிலையில் இரண்டாவது வாரத்தின் பிக் பாஸ் தலைவராக சுரேஷ் சக்ரவர்த்தி நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இன்று வெளிவந்திருக்கும் ப்ரொமோ வீடியோவில் சுரேஷ் சக்ரவர்த்தி கூறிய ஒரு விஷயம் நடிகர் ரியோவை கடும் கோபமடைய வைத்திருக்கிறது.
யார் யாரெல்லாம் மாஸ்க் போட்டுட்டு இருக்காங்க என பாலாஜி முருகதாஸ் ஒரு கேள்வியை சுரேஷ் சக்ரவர்த்தியிடம் கேட்கிறார்.
அதற்கு பதில் சொன்ன சுரேஷ் நடிகர் ரியோவை கைகாட்டி பேச ஆரம்பிக்கின்றார்.அதனால் கோபமான ரியோ, "அவர் கேட்ட கேள்விக்கு என்னை எடுத்துக்காட்டாக சொல்லாதீர்கள்.. சொல்லாதீங்க" என கூறி கோபத்துடன் பேசியிருக்கிறார்.
"நான் மறைக்க நினைக்கும் முகம் இதுதான். ஓகே. நீங்கள் யாரை வேண்டுமானாலும் உதாரணம் ஆக எடுத்துக்கொள்ளுங்கள். என்னை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" என்றும் அவர் கூறி இருக்கிறார்.
இதனால் இது தான் இன்று பிக் பாஸ் வீட்டில் பெரிய பிரச்சனை வெடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
16 minute ago
28 minute ago