2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

சிம்புவின் ‘வானம்’

A.P.Mathan   / 2010 ஜூலை 10 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஒரே மாதிரியான நடிப்பிலிருந்து வெளிப்பட்டு, கௌதம்மேனனில் 'விண்ணைத்தாண்டி வருவாயா' படம்மூலம் புதிய அவதாரம் எடுத்திருந்தார் சிம்பு. அந்தப் படத்தின் வெற்றியின் பின்னர் லிங்குசாமியின் 'போடா போடி' திரைப்படத்தில் நடிப்பதாகவிருந்தது. ஆனால் அதனை செப்டெம்பர் வரை தள்ளிவைத்துவிட்டு ‘வானம்’ திரைப்படத்தின் பூஜை போடப்பட்டிருக்கிறது.

தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற ‘வேடம்’ திரைப்படத்தினையே தமிழில் ரீமேக் செய்கிறார்கள். இந்தப் படத்தினை கிரிஷ் இயக்குகிறார். யுவன்சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் உருவாகின்றன. எடிட்டிங் வேலைகளை ஆண்டனி பார்த்துக்கொள்கிறார். சிம்புவுக்கு மிகவும் பிடித்த அனுஷ்கா இந்தப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

வானம் திரைப்படத்தின் ஆரம்ப நிகழ்வில் சிம்புவை சந்தித்தபோது, இது முழுக்கமுழுக்க பொழுதுபோக்கு படமாக உருவாகிறது. தெலுங்கில் வெற்றிகரமாக ஓடிய 'வேடம்' திரைப்படத்தினை நான் மிகவும் ரசித்திருக்கிறேன். குறிப்பாக அல்லு அர்ஜூனின் கதாபாத்திரம் என்னை மிகவும் கவர்ந்திருந்தது. ஆகையினால்தான் தெலுங்கு ரீமேக் படத்தில் நான் நடிக்கிறேன். இந்தத் திரைப்படம் எனது ரசிகர்களுக்கு தீபாவளிப் பரிசாக அமையவிருக்கிறது என குதூகலமாகக் குறிப்பிட்டார்.

வானம் திரைப்படத்தில் கேபிள் டீவி கனெக்ஸன் கொடுக்கும் பையன் வேடத்தில் சிம்பு நடிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--