2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

மலிவு விலையில் மாளவிகா..!

A.P.Mathan   / 2010 ஜூலை 15 , பி.ப. 12:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்ச்சையில் சிக்கியிருந்த நித்தியானந்தா சுவாமிகள் நீண்ட நாட்களாக வாய்க்கு பூட்டுபோட்டு வைத்திருந்தார். அண்மையில் பிணையில் விடுவிக்கப்பட்ட நித்தியானந்தாவிற்கு பிரசங்கம் நடத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டது. அந்தத்தடை, உச்ச நீதிமன்றத்தினால் தளர்த்தப்பட்ட நிலையில் பிடதியில் பிரசங்கத்தினை நிகழ்த்தியிருந்தார்.

நீண்ட நாட்களுக்கு பின்னர் பிரசங்கம் நடத்துவதால் கூட்டம் வருமோ? வராதோ? என்ற சந்தேகம் நித்தியானந்தாவுக்கு வந்தது. அதனால் அரசியல்வாதிகள்போல் தனது கூட்டத்திற்கு பணம் கொடுத்து கூட்டம் சேர்த்திருக்கிறார். மக்கள் கூட்டம் மட்டும் சேர்ந்தால் போதாதே, கிளமரா ஏதாவது இருக்கனுமே என்று யோசித்த நித்தியானந்தா, மலிவாக எந்த நடிகையினை அழைக்கலாம் என்று தேடிப்பாத்திருக்கிறார். அப்படியாக மலிவாக சிக்கியவர் நடிகை மாளவிகாதான். மாளவிகாவின் கணவருடன் கதைத்து, பணம் கொடுத்து மாளவிகாவை தனது பிரசங்கத்தில் கலந்துகொள்ள வைத்திருக்கிறார் நித்தியானந்தா.

தனது தீவிர பக்தை மாளவிகா என வெளியுலகிற்கு காட்டியிருக்கும் நித்தியானந்தாவால் இப்பொழுது சிக்கலில் மாட்டித்தவிக்கிறார் நடிகை மாளவிகா. நீங்களும் ரஞ்சிதா போலவா என குடையத் தொடங்கியிருக்கிறார்களாம் மாளவிகாவை. பணத்துக்கு ஆசைப்பட்டு வீண் வம்பினை விலைக்கு வாங்கிக் கட்டிக்கொண்டதாக புலம்பித்திரிகிறாராம் அவர்…  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--