2020 நவம்பர் 27, வெள்ளிக்கிழமை

வருகிறது சிக்கு…புக்கு…

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 11 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மதராசப்பட்டினம் என்றும் அழகான படத்தினில் நடித்திருந்த ஆர்யாவின் அடுத்த படமான 'சிக்கு புக்கு' தயாராகிவிட்டது. செப்டெம்பர் முதல் வாரத்தில் திரைக்கு வரவிருக்கும் இந்திரைப்படத்தின் இசை வெளியீடு நாளை மறுதினம் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.

மறைந்த இயக்குநர் ஜீவாவின் உதவியாளராக இருந்த மணிகண்டன் இந்தப் படத்தினை இயக்குகிறார். மீடியா வன் குளோபல் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சிக்குபுக்கு படத்தினை தயாரிக்கிறது. ஆர்யாவுடன் சேர்ந்து ஸ்ரேயா நடிக்கிறார். ‘க்ளோனியல் கஸின்ஸ்’ குழுவின் ஹரிஹரன், லெஸ்லி ஆகியோர் இசையமைக்கிறார்கள். மொத்தமாக 7 பாடல்கள் இப்படத்தில் இடம்பிடித்திருக்கின்றன. அதில் இரண்டு பாடல்களையும் பின்னணி இசையினையும் ஏ.ஆர்.ரஹ்மானின் உதவியாளராக இருந்த பிரவின்மணி உருவாக்கியிருக்கிறார்.

எந்திரன் படத்தின் இசை விற்பனையில் சாதனை படைத்த திங் மியூசிக் நிறுவனமே சிக்கு புக்கு படத்தின் பாடல்களையும் வெளியிடுகின்றமை சிறப்பானதாகும்.


  Comments - 0

  • shinna Monday, 20 September 2010 10:50 PM

    இந்த படம் நன்றாக இருக்கும் என நம்புகிறேன்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .