Editorial / 2018 ஒக்டோபர் 09 , மு.ப. 11:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்கொரியாவின் சோல் நகர்- கொயென்க் பிரதேசத்தில் உள்ள எரிபொருள் களஞ்சியசாலை கட்டடத்தில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவம் தொடர்பில், இலங்கையர் ஒருவர் சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டுள்ளாரென, கொரியாவின் ஹெரல்ட் பத்திரிகை இன்று (9) செய்தி வெளியிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள, கொரியா பொலிஸ் அதிகாரிகளால் நேற்றைய தினம் 27 வயதுடைய குறித்த நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைதுசெய்யப்பட்ட நபர் பல வருடங்களாக கொரியாவில் கட்டுமாணத் தொழிலில் ஈடுபட்டு வருபவரெனவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றதுடன், 250 தாங்கிகளில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த, 3 மில்லியன் லீற்றர் எரிபொருள் விரயமாகியுள்ளதாகத் கொரிய தகவல்கள் தெரிவித்துள்ளன.
3 minute ago
12 Nov 2025
12 Nov 2025
12 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
12 Nov 2025
12 Nov 2025
12 Nov 2025