Editorial / 2019 ஜூன் 09 , மு.ப. 10:00 - 1 - {{hitsCtrl.values.hits}}
தம்புளை ரஜ மஹா விகாரையின் விகாராதிபதியை மிரட்டி, 100 மில்லியன் கப்பம் கோரிய மூவர் தம்புளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
விகாராதிபதிக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு, ஜவாஹத் என்ற அமைப்பின் பெயரைப் பயன்படுத்தி கப்பம் கோரிய மூவர் தொடர்பில், பொலிஸாருக்குக் கிடைத்த முறைபாட்டுக்கு அமைய, முன்னெடுக்கப்பட்ட நீண்ட விசாரணைகளையடுத்து சந்தேகநபர்கள் நேற்று (8) கைதுசெய்யப்பட்டுள்ளனர்
கடந்த மே மாதம் 20ஆம் திகதியே சந்தேகநபர்கள் விகாராதிபதிக்கு மிரட்டல் விடுத்துள்ளதுடன் கைதுசெய்யப்பட்ட மூவரும் 25, 19, 34 வயதானவர்கள் எனத் தெரிவித்துள்ள, பொலிஸார் இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
32 minute ago
4 hours ago
02 Nov 2025
02 Nov 2025
Hashmath Monday, 10 June 2019 04:53 AM
இதே சம்பவத்தில் ஒரு முஸ்லிம் சம்பந்தப்பட்டிருந்தால் “இரண்டு முஸ்லிம்கள்” என குறிப்பிடுவீர்கள். என்ன இங்கு மட்டும் இரண்டு பௌத்தர்கள் என குறிப்பிடவில்ல.. இதனை பிரசுரிக்க மாட்டிர்கள் என்பதும் தெரியும்...
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
4 hours ago
02 Nov 2025
02 Nov 2025