2020 ஜூன் 04, வியாழக்கிழமை

கடலுக்குள் சுற்றுலா; ஊபர் சாதனை

Editorial   / 2019 ஜூன் 18 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாடகைப் போக்குவரத்துத் துறையில் ஊபர் நிறுவனம் புதிய அறிமுகங்களை செய்துவரும் நிலையில், முதன் முறையாக கடலுக்குள் சுற்றுலா செல்லும் வாகனத்தை பரிசோதனை முறையில் இயக்கி வெற்றி கண்டுள்ளது.

அவுஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ளGreat Barrier Reef எனப்படும் உலகின் மிகப் பெரிய பவளப்பாறையை கடலுக்குள் சென்று காணும் வகையில் வாகனம் ஒன்றை உபர் நிறுவனம் வடிவமைத்துள்ளது.

எஸ்சி உபர் என பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த நீர்மூழ்கி வாகனம், இருவர் மட்டுமே பயணிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

கடலுக்குள் சுமார் 20 மீற்றர் ஆழம் வரை செல்லும் அந்த வாகனத்தில் செல்ல, நபர் ஒருவருக்கு இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 70 ஆயிரம் ரூபாய் வசூல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சோதனை ஓட்டமும் வெற்றிகரமாக முடிந்துள்ளது. விரைவில் அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X