Editorial / 2018 ஏப்ரல் 25 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
செருக்கு நிறைந்த பணக்காரன், ஏழைகளைப் பார்க்கும் பார்வை விசித்திரமாக இருக்கும். தன்னைப்போலவே, மனித உடல் அவர்களுக்கும் இருக்கும் என்பதை அவர்கள் மறந்தே போகிறார்கள். அவர்களுக்குத் தன்மானம், கௌரவம் இருக்கக் கூடாது என்பதில் இத்தகையவர்கள் பிடிவாதமாக இருக்கின்றார்கள்.
காலம் பல கதைகள் சொல்லிய வண்ணமே உள்ளது. தங்களுக்கு மட்டுமே, நல்ல காலம் நிலையானது என வீம்புடன் நடப்பவர்கள் உளர்.
இன்று, ஏழைகள் பலரின் வாழ்க்கைத்தரம் தாழ்ந்து நிற்பதற்கான காரணம், காலமாற்றங்களின் வலிமையைப் புரிந்து கொள்ளாமையே ஆகும்.
எவரும் பெரும் பதவிக்கும் செல்வத்துக்கும் உரிமை கொண்டாடவும் கல்வி ஞானத்தில் நிகரற்றவர்களாகவும் முடியும். பூமியின் இந்தச் சுழற்சி பேதமற்றது; இங்கு எல்லாமே நடக்கும். இந்த விடயம் உண்மையானது. எவரும் தாழ்வுடன் நிரந்தரமாக வாழ்ந்ததும் கிடையாது. எழுவது எமது கடன்; அது உரிமையும் கூட.
வாழ்வியல் தரிசனம் 25/04/2018
- பருத்தியூர் பால. வயிரவநாதன்
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026