J.A. George / 2020 டிசெம்பர் 14 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
கூகுள் நிறுவனத்தின் ஜிமெயில், யூட்யூப் உள்ளிட்ட அதன் பிற சேவைகள் உலகம் முழுவதும் திடீரென்று இன்று (14) மாலையில் முடங்கின.
சுமார் 15 நிமிடங்களுக்கும் மேலாக இந்த நிலை தொடர்ந்த வேளையில், #GoogleDown #YouTubeDOWN என்ற ஹேஷ்டேக்குகள் சமூக ஊடகங்களில் டிரெண்டாகி வருகின்றன.
எனினும் கூகுள் மின்னஞ்சல் சேவை 15 நிமிடங்களுக்குப் பிறகு இயங்கத் தொடங்கியுள்ள நிலையில், கூகுள் இணைய சேவை சேவை முடக்கம் தொடர்பாக கண்காணித்து வரும் டவுன் டிடெக்டர் என்ற அமைப்பு, உலக அளவில் 20 ஆயிரத்துக்கும் அதிகமான முடக்கங்கள் பதிவாகியிருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த திடீர் முடக்கம் காரணமாக, கூகுள் நிறுவனத்தின் எந்தவொரு சேவையையும் பயனர்களால் அணுக முடியாத நிலை சுமார் 15 நிமிடங்களுக்கு நீடித்தது.
இந்த நேரத்தில் உலகம் முழுவதும் கோடிக்கணக்கான கூகுள் சேவை பயனர்கள், ஜிமெயில், கூகுள் டிரைவ், ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோர் சேவைகள், கூகுள் மேப் உள்ளிட்டவற்றை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டார்கள்.
ஆனால், பல நாடுகளில் கூகுள் சேவை இயல்புநிலையில் தொடர்ந்ததாக பயனர்கள் கூறியிருந்தனர்.
இந்த நிலையில், கூகுள் சேவை முழுமையாக முடங்கியதால் மாலை வேளையில் பலர் அவதிப்பட்டனர். மிகவும் அரிதாக இப்படி நடப்பதால், கூகுள் நிறுவன சேவைக்கு என்ன ஆனது என்பதை அறிய பலரும் இணைய பக்கங்களில் விவரங்களை தேடினார்கள்.
இதற்கிடையே, யூட்யூப் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில், “உங்களில் பலரும் யூட்யூப் சேவையை அணுக முடியாமல் பிரச்னையை எதிர்கொண்டிருக்கிறீர்கள் என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். எங்களுடைய குழு அது குறித்து கவனித்து வருகிறது. விரைவில் என்ன நடந்தது என்ற தகவலை தெரிவிக்கிறோம்” என்று கூறியுள்ளது.
22 minute ago
36 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
36 minute ago