2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

டுவிட்டர் வழங்கவுள்ள புளு டிக் வெரிபிகேஷன்

S. Shivany   / 2020 நவம்பர் 29 , மு.ப. 10:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

டுவிட்டர் தளத்தில் பயனாளர்களிடையே வெரிபிகேஷன் டிக் பெறுவதற்கு அதிக போட்டி இருந்து வந்தது. இந்தச் சேவை 2017 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டது.  

இந்நிலையில், டுவிட்டர்  புளு டிக் வெரிபிகேஷன் சேவையை 2021 ஆண்டு தொடக்கத்தில் மீண்டும் ஆரம்பிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இம்முறை வெரிபிகேஷன் சேவையில் அதிக மாற்றங்கள் இருக்கும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.

புளு டிக் வெரிபிகேஷன் பெறுவதற்கான விண்ணப்பங்கள் அடுத்த ஆண்டு கோரப்படவுள்ளது. அதற்கான விதிமுறைகளை டுவிட்டர்  மாற்றம் செய்து வருகிறது. புதிய விதிமுறைகளின் படி, ஏற்கனவே புளு டிக் வைத்திருப்பவர்களிடம் இருந்தும் புளு டிக் பறிக்கப்படலாம் எனவும் கருத்து நிலவுகிறது. 

அத்துடன், புதிய வெரிபிகேஷன் வழிமுறைகள் பற்றி பயனாளிகள் கருத்து தெரிவிக்கலாம் என டுவிட்டர்  கேட்டுக் கொண்டுள்ளது. இதற்கான கருத்துக்களை டிசெம்பர் 8 ஆம் திகதிக்குள் சமர்பிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .