Editorial / 2019 டிசெம்பர் 01 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒன்றரை டன் அளவு அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் திறன் கொண்ட அக்னி-3 ஏவுகணை, முதன்முறையாக இரவில் சோதித்து பார்க்கப்பட்டது.
ஒடிசா மாநில கடற்பகுதியில் உள்ள அப்துல் கலாம் தீவில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அக்னி-3 ஏவுகணை, 3 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் திறன்கொண்டதாகும்.
சுமார் 17 மீட்டர் அகலமும் 50 டன் எடையும் கொண்ட இந்த ஏவுகணை ஏற்கனவே இந்திய ராணுவத்தில் இணைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.
அக்னி-3 ஏவுகணையின் செயல்திறனைக் கண்டறிய ஏற்கனவே மூன்று முறை சோதனை செய்யப்பட்டதாகவும், தற்போது முதன்முறையாக இரவில் சோதித்ததாகவும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு கூறியுள்ளது.
41 minute ago
45 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
41 minute ago
45 minute ago
55 minute ago