2020 ஒக்டோபர் 23, வெள்ளிக்கிழமை

பாரிய சூரிய சுவாலையால் இலங்கையின் தொடர்பாடல் வலையமைப்பு பாதிக்காது

Menaka Mookandi   / 2011 பெப்ரவரி 18 , மு.ப. 06:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

ஒரு பாரிய புவி காந்தப் புயலை தோற்றுவித்த சூரியனின் சீற்றம் வானொலி தொடர்பாடலை குழப்பியுள்ளது. இனிவரும் நாட்களில் இது மின்வலு வலையமைப்பு, வானொலி தொடர்பாடல், செய்மதி தொடர்பாடல் ஆகியவற்றைக் குழப்பலாம் என நாசா அறிவித்துள்ளது.

இருப்பினும் இந்த சீற்றத்தினால் இலங்கையின் தொடர்பாடல் வலையமைப்புக்கள் பாதிக்கப்பட மாட்டாது என இலங்கையிலுள்ள ஆர்தர் சி கிளார்க் மையத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இந்த சீற்றத்தினால் ஸ்கென்டிநேவிய நாடுகளும் துருவப் பகுதிகளுக்கு அண்மையில் உள்ள நாடுகளும் பாதிக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, வியாழன் கிரகம் அளவுள்ள சூரிய புள்ளியிலிருந்து புறப்படும் மின்னேற்றம் பெற்ற முதலுரு துணிக்கைகளாலான ஒரு வலுவான அலை தென் சீனாவின் வானொலி தொடர்பாடலை ஏற்கனவே குழப்பிவிட்டது. இது கடந்த செவ்வாய்க் கிழமை சர்வதேச நேரப்படி 01.56 மணிக்கு நடந்தது என நாசா மேலும் குறிப்பிட்டுள்ளது.


  Comments - 0

 • Sirajun Isthikar Thursday, 14 April 2011 07:33 PM

  நடப்பது எல்லாம் இறைவன் செயல் . naam என்ன செய்ய முடியும் .இருந்துதான் பார்ப்போமே.

  Reply : 0       0

  halith Friday, 18 February 2011 06:06 PM

  இது இறைவனின் சோதனை.

  Reply : 0       0

  xlntgson Friday, 18 February 2011 08:42 PM

  சந்தேகமே இல்லாமல் இது சோதனை தான். சோதனைக்கு மேல் சோதனை. ஏற்கனவே கடும் குளிர் கடும் வெப்பம் என்று மாறி மாறி தாவரங்களுக்கும் உயிரினங்களுக்கும் பெரும் துன்பத்தை அழிவை விளைவித்து வருகின்றன. இயற்கையோடு ஒட்டிய வாழ்வை மனிதர்கள் வாழாமையினால் என்று அறிந்தாலும் கூட தங்களின் சுகங்களை விட்டுக் கொடுக்காமல் நகர வாழ்வுக்கு அடிமையாகி இருக்கின்றனர். மேலும் அவர்கள் கிராமங்களை நகர மயமாக்கிக் கொண்டு இருக்கின்றனர், ஆளில்லாத சிறு விமானங்களில் தாக்கி பெரும் புகையையும் சூழல் மாசையும் ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றனர்.

  Reply : 0       0

  a.m.hilmi Saturday, 19 February 2011 03:56 AM

  இறைவனை மனிதனால் வெல்லமுடியாது என்பதற்க்கு உரிய ஆதாரம் தான் இந்த சூரிய சுவாலை.

  Reply : 0       0

  riyas Saturday, 19 February 2011 03:57 PM

  இது இறைவனின் படைப்பு அவனுடைய கட்டளைக்கு அடிபணிந்து.

  Reply : 0       0

  Mayaavi Wednesday, 18 May 2011 04:22 PM

  எல்லாம் அல்லாஹ்வின் செயல் மனிதன் படிப்பினை பெறுவதற்காக.

  Reply : 0       0

  fahmy Thursday, 03 March 2011 12:47 AM

  இந்த உலகம் அழியப்போவதை நமக்கு தெரியப்படுத்தும் முன் அறிவிப்புக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து, சூரியன் வெடித்து சிதறும் உலகம் உட்பட முழு அகிலமும் அழியும். இது விஞ்ஞானிகளுக்கு தெரியும் ஆனால் மறைக்கின்றனர்

  Reply : 0       0

  rathika reyman Wednesday, 27 April 2011 10:31 PM

  இறைவனின் பிடியில் இருந்து யாரும் தப்பி விட முடியாது, எல்லாம் அவன் செயல்.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--