Princiya Dixci / 2020 நவம்பர் 09 , பி.ப. 07:41 - 0 - {{hitsCtrl.values.hits}}

சகா
வரலாற்றுப் பிரசித்திபெற்ற திருக்கோவில், சித்திரவேலாயுத சுவாமி கோவிலில், இவ்வாண்டுக்கான கந்தசஷ்டி வழமைபோ நடைபெறும் என்றும் ஆனால், பக்தர்களுக்கும் விரதாதிகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் கோவில் பரிபாலன சபைத் தலைவர் சுந்தரலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் சமகால கொரோனா வைரஸ் பரவல் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, கோவில் பரிபாலன சபையின் உயர்பீடக் கூட்டத்தில் மேற்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதென அவர் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், “இந்துக்களின் மிக முக்கிய விரதங்களிலொன்றான கந்தசஷ்டி விரதம், இம்மாதம் 15ஆம் திகதி தீபாவளியன்று ஆரம்பமாகின்றது. 6 நாட்கள் அனுஸ்டிக்கும்இவ்விரதத்தை, பல நூறு பக்தர்கள் எமது கோவிலில் அனுஸ்டிப்பது வழமை. ஆனால், இம்முறை கொரோனா வைரஸ் பரவலி் சூழலால் அதற்குத் தடைவிதிக்கப்பட்டிருக்கிறது” என்றார்.
அதேபோல், இறுதிநாள் இடம்பெறும் சூரசம்ஹார நிகழ்வும் இம்முறை நடத்துவதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை அந்த 6 நாட்களும் தினப்பூஜை கோவில் குரு சிவஸ்ரீ நீதி அங்குசநாதக் குருக்கள் தலைமையில் நடைபெறவுள்ளதுடன், அன்றைய உபயகாரர் மாத்திரம் கோவிலுக்கு வந்து பூஜையில் பங்கேற்கமுடியுமெனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
04 Jan 2026
04 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
04 Jan 2026
04 Jan 2026