2021 ஏப்ரல் 18, ஞாயிற்றுக்கிழமை

திருமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் சூரஸம்ஹார நிகழ்வு

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 16 , பி.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை ஸ்ரீ பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் சூரஸம்ஹார நிகழ்வு நேற்று சனிக்கிழமை மாலை முற்றவெளி மைதானத்தில் நடைபெற்றது. அம்பாள் சூரஸம்ஹாரத்தில் ஈடுபட்டிருப்பதையும், அதனைத் தொடர்ந்து மீண்டும் ஆலயத்திற்கு வருவதையும் படங்களில் காணலாம்.

இன்று ஞாயிற்றுக்கிழமை கும்ப திருவிழா நடைபெறவுள்ளது. கும்பத் திருவிழாவில் ஆலயங்களில் இருந்து கும்பம், கரகம் என்பன வீதிகளில் ஊர்வலமாக எடுத்து செல்லப்படும். இரவு பத்திரகாளி அம்பாள் ஆலயத்தின் மாணம்பூத் திருவிழா முற்றவெளி மைதானத்தில் நடைபெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .