Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூலை 31 , பி.ப. 03:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்நாள்களில், பதவிகளை ஏற்றுக்கொண்டு, அரசாங்கத்தில் இணையுமாறு, அதிகளவு அழைப்பு விடுக்கப்படும் இருவர், நாட்டை ஆளும் மன்றத்தில் இருக்கின்றனராம்.
அவர்களில் ஒருவர், வடக்குப் பக்கம் என்றும் மற்றையவர், மத்திய மலைநாட்டைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகிறது. இவ்விருவரது கட்சிகளிலும், அவர்களுடன் சேர்ந்து மூன்று எம்.பி.க்கள் மூவர் மட்டுமே இருக்கின்றனராம்.
ஆனாலும், இவர்கள் இருவருக்கும் இரண்டு கட்சிகள் இருப்பதால் தான், இவ்வாறானதொரு அழைப்பு விடுக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இவர்கள் இருவரில் ஒருவர், எப்போது பதவி கிடைக்கிறதோ, அந்த உடனேயே அரசாங்கத்துடன் இணைந்துகொள்ளத் தயாராக இருக்கிறாராம். இதுபற்றி, அவர் தனக்கு நெருக்கமான அமைச்சர் ஒருவரிடத்திலும் தெரிவித்திருக்கிறாராம்.
ஆனால் அவர், மொட்டில் மலரவுள்ள முன்னாள் செயலாளரின் அலுவலகம் பக்கமாகவும் அண்மையில் சென்று வந்ததாகக் கூறப்படுகிறது.
படகு எந்த பக்கம் கவிழ்ந்தாலும், ஏதாவது ஒரு பக்கமாகக் கரையொதுங்கலாம் என்ற முடிவில் தான், அவர் இப்போது இருக்கிறாராம். ஆனால் அந்த வடக்கு நபர், தான் இருந்த இடத்தில் தான் இன்னும் அடி வைத்துக்கொண்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது.
57 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
57 minute ago
2 hours ago
3 hours ago