2020 ஓகஸ்ட் 12, புதன்கிழமை

வரலாற்றில் இன்று : செப்டெம்பர் 08

Editorial   / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 03:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

1900 : டெக்சாசை சூறாவளி கால்வெஸ்டன் தாக்கியதில் 8,000 பேர் வரை உயிரிழந்தனர்.

1905 : தெற்கு இத்தாலியில் 7.2 அளவு நிலநடுக்கம் தாக்கியதில் 557 முதல் 2,500 பேர் வரை உயிரிழந்தனர்.

1914 : முதலாம் உலகப் போர் - போரின் போது அணியை விட்டு வெளியேறிய பிரித்தானியப் படைவீரர் தோமசு ஐகேட்டு என்பவருக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.

1923 : கலிபோர்னியாவில் ஏழு அமெரிக்கக் கடற்படைக்கப்பல்கள் மூழ்கின. 23 மாலுமிகள் உயிரிழந்தனர்.

1925 – எசுப்பானியப் படைகள் பிரான்சிஸ்கோ பிராங்கோ தலைமையில் மொரோக்கோவில் தரையிறங்கின.

1926 : ஜேர்மனி உலக நாடுகள் சங்கத்தில் இணைந்தது.

1933 : ஈராக்கின் மன்னராக காசி பின் பைசல் முடி சூடினார்.

1934 : நியூ செர்சிக் கரையில் பயணிகள் கப்பல் தீப்பற்றி எரிந்ததில் 137 பேர் உயிரிழந்தனர்.

1941 : இரண்டாம் உலகப் போர் – ஜேர்மனியப் படைகளின் லெனின்கிராட் முற்றுகை ஆரம்பமானது.

1943 : இரண்டாம் உலகப் போர் - அமெரிக்கத் தளபதி டுவைட் டி. ஐசனாவர் இத்தாலி-நேசநாட்டுப் படைகள் இடையே போர் நிறுத்தத்தைப் பொது மக்களுக்கு அறிவித்தார்.

1944 : இரண்டாம் உலகப் போர் - வி-2 ஏவுகணை மூலம் முதல் தடவையாக இலண்டன் நகரம் ஜேர்மனியால் தாக்கப்பட்டது.

1945 : சோவியத் படைகள் வட கொரியாவை ஒரு மாதத்துக்கு முன்னர் கைப்பற்றியமைக்குப் பதிலடியாக அமெரிக்கப் படைகள் தென் கொரியாவில் தரையிறங்கின.

1946 : பல்கேரியாவில் முடியாட்சி பொது வாக்கெடுப்பு மூலம் ஒழிக்கப்பட்டது.

1954 : தென்கிழக்கு ஆசிய ஒப்பந்த அமைப்பு நிறுவப்பட்டது.

1970 : நியூயார்க் நகரில் கென்னடி பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் இருந்து வானூர்தி ஒன்று புறப்பட்ட போது விபத்துக்குள்ளாகியதில் 11 பேர் உயிரிழந்தனர்.

1974 : வாட்டர்கேட் சர்ச்சை - பதவியில் இருக்கும் போது குற்றங்கள் இழைத்தமைக்காக ரிச்சார்ட் நிக்சனுக்கு மன்னிப்பு வங்கும் உத்தரவில் அமெரிக்க அரசுத் தலைவர் ஜெரால்ட் ஃபோர்ட் கையெழுத்திட்டார்.

1978 : கறுப்பு வெள்ளி - தெகுரானில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக இராணுவத்தினர் சுட்டதில் 700–3000 பேர் வரை கொல்லப்பட்டனர். இது ஈரானில் முடியாட்சியை முடிவுக்குக் கொண்டுவர வழிவகுத்தது.

1989 : டென்மார்க்கில் விமானம் ஒன்று வட கடலில் மூழ்கியதில் அதில் பயணம் செய்த அனைத்து 55 பேரும் உயிரிழந்தனர்.

1991 : மாக்கடோனியக் குடியரசு விடுதலை அடைந்தது.

1994 : அமெரிக்காவில் பிட்ஸ்பர்க் விமான நிலையத்தில் வீழ்ந்து நொருங்கியதில், அதில் பயணம் செய்த அனைத்து 132 பேரும் உயிரிழந்தனர்.

2006 : இந்தியாவில் மகாராஷ்டிரா மாநிலத்தில் மாலேகான் நகரில் மசூதி, சந்தைப் பகுதிகளில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளில் 40 பேர் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

2016 : நாசா ஒசைரிஸ் - ரெக்ஸ் என்ற தனது சிறுகோள் -நோக்கிய விண்கலத்தை ஏவியது. இது 1,01,955 பென்னு என்ற சிறுகோளில் இருந்து மாதிரிகளை எடுத்துக் கொண்டு 2023இல் பூமி திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--