2020 ஓகஸ்ட் 12, புதன்கிழமை

வரலாற்றில் இன்று : செப்டெம்பர் 09

Editorial   / 2019 செப்டெம்பர் 09 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

1922 : கிரேக்க-துருக்கியப் போர் துருக்கியரின் வெற்றியுடன் முடிவுக்கு வந்தது.

1924 : அமெரிக்காவின் அவாயில், கௌவை நகரில் சர்க்கரைத் தொழிற்சாலைத் தொழிலாளர் பணி நிறுத்தத்தில் ஈடுபட்டபோது காவற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 16 பேர் கொல்லப்பட்டனர்.

1939 : பர்மாவில் பிரித்தானிய ஆட்சிக்கு எதிராக உண்ணாநிலைப் போராட்டம் நடத்திய பர்மிய தேசிய வீரர் ஒட்டாமா சிறையில் இறந்தார்.

1940 : வடக்கு டிரான்சில்வேனியாவை ருமேனியாவிடம் இருந்து ஹங்கேரிக்குக் கையளிக்கும் நிகழ்வில் இடம்பெற்ற கலவரங்களில் 93 உருமேனியரும் யூதர்களும் கொல்லப்பட்டனர்.

1942 : இரண்டாம் உலகப் போர் - ஜப்பானிய விமானம் ஒரிகனில் குண்டுகளை வீசியது.

1944 : பல்கேரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து சோவியத்-சார்பு அரசு பதவியேற்றது.

1945 : இரண்டாம் சீன - ஜப்பானியப் போர் - ஜப்பான் சீனாவிடம் சரணடைந்தது.

1947 : முதல் தடவையாக மென்பொருள் வழு ஒன்று ஆர்வர்டு பல்கலைக்கழகத்தின் கணினி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது.

1948 : கிம் இல்-சுங் கொரிய சனநாயக மக்கள் குடியரசை அதிகாரபூர்வமாக அமைத்தார்.

1954 : அல்சீரியாவில் இடம்பெற்ற 6.7 அளவு நிலநடுக்கத்தில் 1,243 பேர் உயிரிழந்தனர்.

1965 : நியூ ஓர்லென்ஸ் அருகே பெட்சி சூறாவளி தாக்கியதில் 76 பேர் உயிரிழந்தனர்.

1969 : கனடாவில் பிரெஞ்சு மொழியும் ஆங்கிலமும் நடுவண் அரசு முழுவதும் அதிகாரபூர்வ மொழிகளாக அறிவிக்கப்பட்டன.

1970 : பிரித்தானிய விமானம் ஒன்று பாலஸ்தீனப் போராளிகளால் கடத்தப்பட்டு யோர்தானுக்குக் கொண்டு செல்லப்பட்டது.

1971 : நியூயார்க்கில் அட்டிக்கா சிறைச்சாலையில் நான்கு-நாள் கலவரம் ஆரம்பமானது. இறுதியில் 39 பேர் கொல்லப்பட்டனர்.

1990 : சத்துருக்கொண்டான் படுகொலை - மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் பகுதியில் 5 கைக்குழந்தைகள், 42 பத்துவயதுக்கு குறைவான சிறுவர்கள், 85 பெண்கள், 28 முதியவர்கள் உட்பட 184 தமிழர் இலங்கை இராணுவத்தாரால் கொல்லப்பட்டனர்.

1991 : சோவியத் ஒன்றியத்தில் இருந்து தஜிகிஸ்தான் விடுதலையடைந்தது.

1993 : பலஸ்தீன விடுதலை இயக்கம் இஸ்ரேலைத் தனிநாடாக அங்கிகரித்தது.

2001 : ஆப்கானித்தானில் வடக்குக் கூட்டணித் அகமது சா மசூது இரண்டு அல் காயிதா தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

2004 : இந்தோனேசியா, ஜகார்த்தாவில் ஆஸ்திரேலியத் தூதரகத்துக்கு முன்னால் இடம்பெற்ற குண்டுவெடிப்பில், 10 பேர் கொல்லப்பட்டனர்.

2002 : பீகாரில் ரயில் ஒன்று தடம் புரண்டதில் 130 பேருக்கு மேல் உயிரிழந்தனர்.

2009 : துபை மெட்ரோ சேவை ஆரம்பிக்கப்பட்டது.

2012 : ஈராக்கில் இடம்பெற்ற பல்முனைத் தாக்குதல்களில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

2015 : ஐக்கிய இராச்சியத்தில் அதிக காலத்துக்கு ஆட்சியில் இருந்தவர் என்ற பெருமையை இரண்டாம் எலிசபெத் பெற்றார்.

2016 : வட கொரியா தனது ஐந்தாவதும், மிகப்பெரியதுமான அணுவாயுத சோதனையை மேற்கொண்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--