2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

கொழும்பில் கழுத்து வெட்டப்பட்ட சடலம் மீட்பு

J.A. George   / 2021 ஏப்ரல் 07 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, கல்கிஸை காலி வீதியில் உள்ள வீடொன்றுக்கு அருகில் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கல்கிஸை பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டது.

கல்கிஸை பகுதியை சேர்ந்த 22 வயதான இளைஞன் ஒருவரின் சடலமே மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சடலம்  களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்,  பிரேத பரிசோதனை மற்றும் நீதவான் விசாரணை இன்று நடத்தப்படவுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து கல்கிஸை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X