2020 ஏப்ரல் 05, ஞாயிற்றுக்கிழமை

சுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை தொடர்பில் ஹர்ஷவின் கோரிக்கை

Editorial   / 2020 மார்ச் 23 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா தொடர்பான அச்சம் மக்கள் மத்தியில் காணப்படும் நிலையில், சுவசெரிய அம்பியுலன்ஸ் சேவைக்கு அதிகமான அழைப்புகள் வருவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

அத்துடன், மக்கள் இந்த வேளையில் மிகவும் பொறுப்புடன் இவ்வாறான  அழைப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் தேவையற்ற விதத்தில் கொரோன தொற்றுவதற்கான சாத்தியங்கள் இல்லாத போது அழைப்புகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டில் தற்போதைய நிலையில் சுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை உள்ளிட்ட வைத்தியதுறையுடன் தொடர்புடைய சேவைகளுக்கு அதிக தேவை ஏற்பட்டுள்ள நிலையில் தேவையற்ற அழைப்புகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் இந்த விடயங்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.

--


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .