2025 டிசெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

’பாகமதி’

Editorial   / 2018 ஜனவரி 12 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாகுபலி 2 திரைப்படத்தை அடுத்து அனுஷ்கா நடித்துள்ள பாகமதி திரைப்படம், ஜனவரி 26ஆம் திகதி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளது.

இப்படத்தை பில்லா ஜமீந்தார் புகழ் அசோக் இயக்கியுள்ளார். அனுஷ்காவுடன் உன்னி முகுந்தன், ஜெயராம், ஆஷாசரத் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். முன்ஜென்மம் மற்றும் ஹாரர் கலந்த திரில்லர் கதையில் பாகமதி உருவாகியிருக்கிறது.

பாகமதி டிரைலருக்கு, ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்திருக்கிறது. டிரைலர் வெளியான மூன்று நாட்களில், பாகமதி தெலுங்கு டிரைலரை 77 இலட்சம் பேர் பார்த்துள்ளனர், 1.29 இலட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.

தமிழ் டிரைலரை 14.45 இலட்சம் பேர் பார்த்துள்ளனர். 30 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர். இதன்மூலம் இரண்டு டிரைலர்களையும் சேர்த்து 10 மில்லியன் பார்வையாளர்கள் இந்த டிரைலரைப் பார்வையிட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X