இலங்கையின் சாதனை

கண்டியில் தீவிரமடைந்த வன்முறைச் சம்பவங்களை அடுத்து, இலங்கையில் சமூக வலைத்தளங்களான பேஸ்புக். வட்ஸ்அப், வைபர் உள்ளிட்டவை தற்காலிகமாக தடை செய்யப்பட்டன. எனினும் இந்த நடவடிக்கை, உலகளாவிய ரீதியில் சாதனையாக பதிவாகியுள்ளது.

இணையப் பயன்பாடு காரணமாக, இரு சாதனைகள் நிலைநாட்டப்பட்டுள்ளன. அதில் முதலாவது சாதனை, ஒரே நாளில் வெளிநாட்டு இணைய முகவரி (IP) பயன்படுத்தி, சமூக வலைத்தளங்களுக்கு சென்றமை மற்றும் கூகிள் ஊடாக VPN (Virtual Private Network) என்ற செயலியை அதிக முறை பதிவிறக்கம் செய்த நாடாக, இலங்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 7 நாட்களில், 6 கூகிளின் பிரபலமானவைகள் ஊடாக (Google Trends) மேற்கொண்ட கணக்கெடுப்பில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த நாட்களில், Porn என பயன்படுத்தப்பட்ட வார்த்தை அளவு VPN என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. VPN மற்றும் Google என்ற வார்த்தை சமமான அளவு கூகிளின் பிரபலமானவைகள் ஊடாக (Google Trends) பயணித்துள்ளது.

அத்துடன், இணையத்தளத்தை பயன்படுத்துபவர்களில் 50 வீதத்துக்கும் அதிகமானோர், VPN (Virtual Private Network) பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில், அண்மைக் காலமாக இலங்கையில் முடக்கப்பட்டிருந்த இணையத்தளங்களும் இயங்க ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை, பேஸ்புக், வட்ஸ்அப், வைபர் உட்பட சமூக வலைத்தளங்கள், 72 மணித்தியாலங்கள் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


இலங்கையின் சாதனை

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

 
Services
All the content on this website is copyright protected and can be reproduced only by giving the due courtesy to 'www.tamilmirror.lk' Copyright © 2012 Wijeya Newspapers Ltd.