2020 பெப்ரவரி 26, புதன்கிழமை

உலகில் மிக நீளமான பீசா

Kogilavani   / 2017 ஜூன் 27 , பி.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

நூற்றுக்கும் மேற்பட்ட பீசா தயாரிப்பாளர்கள் இணைந்து, மிக நீளமான  பீசாவைத் தயாரித்து கின்னஸ் உலக சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.

 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், இச்சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது. Pizzaovens.com இன் ஏற்பாட்டில் நடைபெற்ற இச்சாதனை நிலைநாட்டல் பயணத்தில், பீசா தயாரிப்பதில் மிகச் தேர்ச்சிப்பெற்ற சமயற்கலை நிபுணர்கள் பங்கேற்றுள்ளனர்.

இவர்கள், சுமார் 1,930 அடி நீளமான பீசாவை தயாரித்து, இந்த  சாதனையை நிலைநாட்டியுள்ளனர்.

இந்த பீசாவை தயாரிப்பதற்காக, 3,632 கிலோகிராம் மா, 1,634 கிலோகிராம் சீஸ், 2,542 கிலோகிராம் சோஸ் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கு முன்பு,  நேபாளம் நாட்டில் நிலைநாட்டப்பட்ட  சாதனையை, அமெரிக்காவின் கலிபோர்னியா  மாகாணம் முறியடித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .