2024 மே 01, புதன்கிழமை

'நூலகம் நிறுவனம்' காப்பாளர்கள் இணைப்பு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 23 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

'எழுத்தாளர்கள் தங்கள் நூல்களை எண்ணிம நூலகத்துடன் இணைத்துக் கொள்ளவும், தமிழர்கள் தொடர்பான மிகப் பழமைவாய்ந்த நூல்கள், வெளியீடுகள் இருப்பின், அவற்றை பாதுகாத்து ஏனையோருக்கு தெரியப்படுத்தவும் 'நூலகம் நிறுவனம்' அறிய வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளது.

இது தொடர்பில் நூலகம் நிறுவனம் வெளயிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

'இலங்கை தமிழ் பேசும் சமூகங்களின் வாழ்வியல், அறிவுசார் கூறுகளை ஆவணப்படுத்தி பாதுகாக்கும் நோக்குடனும், அதை சகலருகம் அறிந்துகொள்ளும் வகையில் வெளிப்படுத்தும் நோக்குடனும் உருவாக்கப்பட்டதே 'நூலகம் நிறுவனம்'.

பாரம்பரியங்களை பாதுகாத்தல் என்பது மொழியை, கலாசாரத்தை, இனத்தை பாதுகாப்பதற்கு சமனானது.

அறிவை சகலருக்கும் பகிர்தல் சமூகங்களின் இடையறா வளர்ச்சிக்கும் அபிவிருத்திக்கும் பக்க பலமானது. இதை முன்னெடுக்கும் நோக்கில் உருவான 'நூலகம் நிறுவனம்' இலாப நோக்கற்று, தனிநபர்களினதும், தன்னார்வ நிறுவனங்களினதும் ஆதரவுடனேயே  இயங்குகிறது.

இலங்கை தமிழ் பேசும் சமூகங்கள் தொடர்பான அனைத்து வெளியீடுகளையும் ஆவணப்படுத்தி அறிவைப்பகிரும் நோக்கில் எண்ணிம  நூலகத்தையும் (digital library) (www.noolaham.org)'நூலக நிறுவனம்' உருவாக்கியுள்ளது.

தற்போது இலங்கை எழுத்தாளர்களின் பல்வேறு நூல்களையும், வெளியீடுகளையும் இந்த எண்ணிம நூலகத்தில் அனைவராலும் பார்க்க முடியும்.

பெரும்பாலும், தன்னார்வலர்களின் உயரிய சேவையடிப்படையில் செயற்படும் இந் நிறுவனத்துக்கு பலரும் பக்கபலமாக உள்ளனர்.

அதன் அடிப்படையில் காப்பாளர்களாக பத்மநாப ஐயர் (இலண்டன்), பேராசிரியர்.எஸ்.பத்மநாதன், பேரசிரியர்.எஸ்.மௌனகுரு, கலாநிதி.செல்வி திருச்சந்திரன், பேராசிரியர் எஸ்.சந்திரசேகரம், பேராசிரியர் சபா.ஜெயராசா, பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம் ஆகியோர் பங்களிக்கின்றனர்.

எமது 'நூலகம் நிறுவனத்துடன் இணைந்துகொள்ள விரும்புபவர்கள், (கொழும்பு) நூலக நிறுவனம், இல:-7, 57ஆவது ஒழுங்கை (தமிழ் சங்கம்), கொழும்பு – 6 என்ற முகவரியில் நேரடியாகவோ, அல்லது 0094-112363261 என்ற தொ.பேசி இலக்கித்திற்கோ தொடர்புகொள்ள முடியும்.

இதேபோல், (யாழ்ப்பாணம்)  நூலகம் நிறுவனம், மே/பா யாழ்ப்பாண பொதுநூலகம், யாழ்ப்பாணம் என்ற முகவரிக்கோ அல்லது 0094 0212231292 தொ.பேசி  இலக்கத்திற்கோ தொடர்புகொள்ளமுடியும்' என அறிவித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X