Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2016 ஜூலை 23 , மு.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
அஞ்சல் திணைக்களத்தினால், 2017ஆம் ஆண்டில் வெளியிடப்படவுள்ள ஞாபகார்த்த முத்திரைகளுக்கான பொருத்தமான தலைப்பை கவனத்தில் எடுப்பதற்கான ஆலோசனைகள் பொதுமக்களிடமிருந்து கோரப்பட்டுள்ளதாக அஞ்சல் அதிபர் டீ.எல்.பி.ஆர். அபயரத்ன கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் நடைபெற்ற முக்கியமான சம்பவங்கள், ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள், மதிப்புக்குரிய நபர்கள், தேசிய பெருமையை வெளிப்படுத்தும் இயற்கை காட்சிகள், விளையாட்டு, தேசிய பெருமையைக் காட்டும் கலாசார விழுமியங்கள் ஆகிய விடயங்களை உள்ளடக்கியதான தலைப்புகள் கோரப்பட்டுள்ளன.
இந்த ஆலோசனையானது அதன் முக்கியத்துவம் குறித்த சுருக்கமான விளக்கமும் திகதியை உறுதிப்படுத்துவதற்கான எழுத்து மூலமான ஆவணங்கள் மற்றும் அனுப்புவரின் பெயர், முகவரி, அலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி, கையொப்பம் முதலியனவும் அடங்கியிருத்தல் வேண்டும் என அவர் தெரிவித்தார்.
சகல ஆலோசனைகளும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 31ஆம் திகதிக்கு முன்பதாக பணிப்பாளர், முத்திரைப் பணியகம், அஞ்சல் தலைமையகம், இல-310, டி.அர். விஜயவர்தன மாவத்தை, கொழும்பு-10 எனும் முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அஞ்சல் அதிபர் டீ.எல்.பி.ஆர். அபயரத்ன மேலும் தெரிவித்தார்.
5 minute ago
18 minute ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
18 minute ago
7 hours ago