2021 ஜூன் 24, வியாழக்கிழமை

குப்பைகளை சேகரிக்க விசேட ஏற்பாடு

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2020 ஜனவரி 20 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சாய்ந்தமருது பிரதேசத்தில் திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்தி, சுற்றுச்சூழலை அழகுபடுத்திப் பேணும் நோக்கில் பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில்,  சில பொது இடங்களில் கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவை வாகனங்களை தரித்து வைத்து, குப்பைகளை சேகரிக்கும் விசேட திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கல்முனை மாநகர சபையின் 20ஆம் வட்டார உறுப்பினர் எம்.வை.எம்.ஜௌபரினதும் 'இயற்கையை நேசிக்கும் மன்றம்' எனும் அமைப்பினதும் வேண்டுகோளையேற்று, மாநகர மேயர் ஏ.எம்.றகீபின் பணிப்புரையின் பேரில், ஆணையாளர் எம்.சி.அன்சாரின் வழிகாட்டலில், சுகாதார மேற்பார்வையாளர் யூ.கே.காலிதீனின் கண்காணிப்பில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுகின்றது.

இதன்பிரகாரம், சாய்ந்தமருது வைத்தியசாலை வீதிப் பாலம் அருகில் நாளாந்தம் காலை 6.30 மணி தொடக்கம் 7.30 மணி வரையும் அல்ஹிலால் வீதிப் பாலம் அருகில் காலை 8.30 மணி தொடக்கம் 9.30 வரையும் இரு இடங்களிலும் ஒவ்வொரு மணித்தியாலம் திண்மக்கழிவகற்றல் சேவை வாகனங்கள் தரித்து நிற்பதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது.

இவ்வேளையில் பொதுமக்கள் தமது வீடுகளில் அன்றாடம் சேர்கின்ற சமையலறைக் கழிவுகளை ஒப்படைக்க முடியுமென அறிவிக்கப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .