ரீ.கே.றஹ்மத்துல்லா / 2020 ஜனவரி 13 , பி.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவுக்கு அமைய, ஆக்கங்களை கொண்டு அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தின் கல்முனை பிராந்திய ஆரம்ப நிகழ்வு, முன்னாள் உயர்கல்வி பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா தலைமையில், கல்முனை அல்-கமறூன் வித்தியாலய முன் பிரதான வீதியில் நேற்று (12) நடைபெற்றது.
அதேவேளை. சட்டத்தரணி மர்யம் நளீம்டீனின் வழிகாட்டலில் ஏ.ஆர். மன்சூர் பவுண்டேசனின் முயற்சியில், கல்முனை கடற்கரை பள்ளிவாசலுக்கு முன்பாக உள்ள பொதுக் கட்டடத்தில் பிரதேச இளைஞர்களால் சுவரோவியங்கள் வரையப்பட்டுவருகின்றன.
கல்முனை மாநகரை அழகுபடுத்தும் நோக்குடனும் பொதுமக்கள் மத்தியில் கடல் வளப் பாதுகாப்பு, போதைப்பொருள் ஒழிப்பு விழிப்பூட்டும் ஓவியங்களை அம்பாறை மாவட்டத்தில் முன்மாதிரியாகவும் முதன்மையாகவும் ஏ.ஆர்.மன்சூர் பவுண்டேசனின் இளைஞர்கள் வரைந்துள்ளனர்.
3 hours ago
5 hours ago
15 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
5 hours ago
15 Nov 2025