2021 ஜூன் 16, புதன்கிழமை

விபத்தில் ஒருவர் பலி; ஒருவர் காயம்

Suganthini Ratnam   / 2016 ஜூலை 29 , மு.ப. 06:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, தமண பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வர்ப்பத்தான்சேனை பிரதான வீதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியதுடன், மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் அம்பாறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வீதியால் வந்த கன ரக லொறி ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிள் சாரதி பலியாகியதுடன், அம்மோட்டார் சைக்கிளின் பின்னால் இருந்துசென்றவர் காயமடைந்துள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.  

வர்ப்பத்தான்சேனை 01ஆம் பிரிவைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் உதுமாலெப்பை ஸாதிக் (வயது -42) என்பவரே விபத்தில் பலியாகியுள்ளார்.

இவ் விபத்து தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .