2021 ஓகஸ்ட் 06, வெள்ளிக்கிழமை

காட்டு யானைகளால் வீடுகள் பயிர்களுக்குச் சேதம்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 08 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர் )

அம்பாறை மாவட்டத்தின் லாஹுகல பிரதேசத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு மின்சார வேலியையும் உடைத்துக் கொண்டு கிராமத்திற்குள் உள்நுழைந்த காட்டு யானைகள் அப்பிரதேசத்திலுள்ள வீடுகள் மற்றும் பயிர்களுக்கும் பலத்த சேதத்தை விளைவித்துள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக நெல் அறுவடை ஓரளவு நிறைவடைந்த நிலையில், எல்லைப்புற காடுகளிலுள்ள யானைகளே இவ்வாறு உணவுக்காகவும் நீருக்காகவும் இவ்வாறு கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் புரிந்துள்ளன.

இவ்வாறு பல தடவைகள் தொடர்ச்சியாக காட்டு யானைகள் தொல்லை கொடுப்பதனால் பயத்தின் காரணமாக வீடுகளை விட்டு வெளியேறி வேறு இடங்களில் குடியிருப்பதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .