2021 ஜூன் 24, வியாழக்கிழமை

உள்ளூர் உற்பத்திகளை அறிமுகம் செய்யும் சமாதான சந்தை

Super User   / 2011 மார்ச் 27 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

உள்ளூர் உற்பத்தியாளர்களின் உற்பத்திகளை அறிமுகம் செய்தல் மற்றும் குறைந்த விலையில் பொருட்களை நுகர்வோர் பெற்றுக் கொள்ள வழி செய்தல் போன்ற நோக்கங்களுடன் மனித எழுச்சி நிறுவனத்தின் ஏற்பாட்டிலான 'சமாதான சந்தை'யொன்று எதிர்வரும் 30ஆம் திகதி அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

பல்வேறு மாவட்டங்களையும் சேர்ந்த உள்ளூர் உற்பத்தியாளர்கள் கலந்து கொள்ளும் இந்த 'சமாதானச் சந்தை'யில் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் கலாசாரங்களைச் சித்தரிக்கும் கலை நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் 30ஆம் திகதி காலை 8.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை இடம்பெறவுள்ள இந்த சந்தையில் உள்ளூர் உற்பத்தியாளர்கள் தமது பொருட்களை அறிமுகம் செய்வதற்கும், விற்பனை செய்வதற்குமான ஒழுங்குகளை ஏற்பாட்டாளர்கள் செய்து கொடுக்கவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .