2021 செப்டெம்பர் 17, வெள்ளிக்கிழமை

வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்களுக்கான வாழ்வாதாரத் திட்டம்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 04 , மு.ப. 04:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

சாய்ந்தமருது பிரதேசத்தில் இயற்கை அனர்த்தங்களக்ல் பாதிக்கப்பட்டு வறுமைக்கோட்டின் கீழுள்ள  மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பும் நோக்கில் ஷெடோ நிறுவனம் வீட்டுத் தோட்டம் அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.

ஷெடோ நிறுவனத்தின் பணிப்பாளர் வி.டி.நிரஞ்சித்தின் வழிகாட்டலிலும் சமூக மேம்பாட்டு உத்தியோகத்தர் காண்டீபன் சசிரேகாவின் ஏற்பாட்டிலிலும் வீட்டுத் தோட்ட முயற்சியில் ஈடுபடும் பயனாளிகளை பயிர்ச்செய்கை பாரியளவில் மேற்கொள்ளப்படும் தம்புள்ள பிரதேசத்திற்கான களப்பயணமொன்றை அண்மையில் ஒழுங்கு செய்திருந்தது.

மரக்கறி பயிர்ச்செய்கை, நாற்றுமேடை அமைத்தல், விளைந்த மரக்கறிகளை சந்தைப்படுத்தல், சேதனப்பசளை பாவனை, விலை நிர்ணயம் ஆகியன தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன் பயிற்சிகளும் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
 
இந்த களப்பயணத்தில் ஷெடோ நிறுவனத்தின் சமூக மேம்பாட்டு உத்தியோகத்தர்  கா.சசிரேகா, நிதி இணைப்பாளர் ஆர். சோபலாதன், திட்ட இணைப்பாளர் கிரேஸ் ராஜன் உத்தியோகஸ்தர்களான பிரேமிதா,  தர்சினி, சாய்ந்தமருது சுற்றாடல் மேம்பாட்டு உத்தியோகஸ்த்தரும் கல்முனை ஸாஹிறா தேசிய கல்லூரி ஆசிரியருமான எம்.ஐ.எம.அஸ்ஹர் ஆகியோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .