2021 செப்டெம்பர் 17, வெள்ளிக்கிழமை

அம்பாறையில் தொழில் பயிற்சி நிலையங்கள் திறப்பு

Kogilavani   / 2011 ஏப்ரல் 09 , மு.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

அம்பாறை மாவட்ட இளைஞர் யுவதிகளின் நன்மை கருதி தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் பல இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட தொழில் பயிற்சி நிலையங்களை இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும திறந்து வைத்தார்.

அம்பாறை மாவட்டத்தின் பதியத்தலாவ பிரதேசத்தில் சுமார் 85 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட தொழில் பயிற்சி நிலையமும்,  சாய்ந்தமருது கடற்கரை வீதீயில் சுமார் 2 கோடி 40 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்ட இலங்கை இளைஞர் நிலையம் மற்றும் இளைஞர் சேவைகள் மன்ற மாகாண காரியாலயம் என்பன அமைச்சரினால் திறந்து வைக்கப்பட்டன.

இந்நிகழ்வின் போது திகாமடுல்ல நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரிஸ், சிரியானி விஜேவிக்கிரம, பொ. பியசேன, கிழக்கு மாகாண கால்நடை அபிவிருத்தி அமைச்சர் நவரட்னராஜா,  சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஏ.எம். நௌசாட் தேசிய இளைஞர் மன்றத்தின் பணிப்பாளர் நாயகமும் தலைவருமான லலித் பியும் பெரேரா சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம்,  இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இளைஞர் சேவைகள் மன்றத்தின் உயர் அதிகாரிகளும் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.  


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .