2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

அக்கரைப்பற்று பிரதேச கலாசார விழா

Editorial   / 2017 டிசெம்பர் 18 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எல்.எஸ்.டீன்

அக்கரைப்பற்று பிரதேச கலாசார விழா, பிரதேச செயலகக் கேட்போர் கூடத்தில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (22) பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

கலாசார அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன், அக்கரைப்பற்று பிரதேச செயலக கலாசார பிரிவு இதனை ஏற்பாடு செய்துள்ளது.

அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப் தலைமையில் இடம்பெறவுள்ள இவ்விழாவில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.விமலநாதனும் கௌரவ அதிதியாக மாவட்ட பிரதம உள்ளக கணக்காய்வாளர் எம்.ஐ.எம்.முஸ்தபாவும்  கலந்துகொள்ளவுள்ளனர்.

இவ்விழாவில் கலைஞர்கள், எழுத்தாளர்கள் எனப் பலர் கௌரவிக்கப்படவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .