2025 மே 03, சனிக்கிழமை

அக்கரைப்பற்றுச் சாலையிலிருந்து கட்டுநாயக்காவுக்கு புதிய பஸ் சேவை

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 11 , மு.ப. 04:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

இலங்கை போக்குவரத்துச் சபையின் அக்கரைப்பற்றுச் சாலையிலிருந்து கட்டுநாயக்காவுக்கு புதிய பஸ் சேவை திங்கட்கிழமை (09) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்றுச் சாலை முகாமையாளர் எம்.ஏ.இர்ஸாத், நேற்று (10) தெரிவித்தார்.

காலை 6 மணிக்கு அக்கரைப்பற்றிலிருந்து புறப்படும் இந்த பஸ் காரைதீவு, சம்மாந்துறை, அம்பாறை, மஹியங்கனை, கண்டி, மாவனல்லை, கேகாலை, நிட்டம்புவ ஆகிய நகரங்கள் ஊடாக கட்டுநாயக்காவை  சென்றடையும் எனவும்  அவர் கூறினார்.

கட்டுநாயக்காவிலிருந்து மறு நாள் காலை 6.30 மணிக்கு அதே வழிப்பாதை ஊடாக அக்கரைப்பற்றைச் சென்றடையும் எனவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X