Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 செப்டெம்பர் 25 , பி.ப. 05:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
குருநாகல், மெல்சிறிபுர நா உயன, ஆரண்ய சேனாசனவில் மடங்களுக்கு இடையே பயணித்த கேபிள் வண்டி, புதன்கிழமை (24) இரவு 9 மணியளவில் உடைந்து வீழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் பௌத்த துறவிகள் ஏழுபேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அதில், பௌத்த துறவிகள் 13 பேர் பயணித்துள்ளனர். மரணித்த துறவிகளில் வெளிநாடுகளைச் சேர்ந்த துறவிகளும் அடங்குகின்றனர். காயங்களுக்கு உள்ளான ஆறு துறவிகளும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றும் அறியமுடிகின்றது.
.
மலை உச்சியில் உள்ள தியானக் குடில்களை நெருங்கும் போது இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மரணமடைந்த துறவிகளில் ரஷ்யா, ருமேனியா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த மூன்று துறவிகளும் அடங்குவர். 27 வயதுக்கும் 48 வயதுக்கும் இடைப்பட்ட துறவிகளே மரணமடைந்துள்ளனர்.
ருமேனியாவைச் சேர்ந்த தம்ம ரஞ்சி தேரர் (வயது 47), ரஷ்யாவைச் சேர்ந்த தம்ம ரக்கித தேரர் (வயது 34), இந்தியாவைச் சேர்ந்த தம்ம கவேஷி தேரர் (வயது 34), நாவலப்பிட்டியை சேர்ந்த உத்தரா நந்த தேரர் (வயது 27), உடவலவையைச் சேர்ந்த சத்த சுமண தேரர் (வயது41), நுகேகொட விபாசி தேரர் (37) சமித் தேரர் (37) ஆகியோரே மரணமடைந்துள்ளனர்.
அந்த கேபிள் காரில் ஒரே நேரத்தில் ஏழு பேர் பயணிக்க முடியும் என்றாலும், விபத்து நடந்த நேரத்தில் 13துறவிகள் அதில் பயணம் செய்ததாக பொலிஸார் கூறுகின்றனர்.
950 மீட்டர் தூரம் கொண்ட இந்த கேபிள் வண்டி 820 மீற்றர் தூரத்துக்கு மட்டுமே ஏறிய பிறகு, கேபிள் இரண்டாக உடைந்து கீழே இழுக்கப்பட்டுள்ளது. இதன்போது இரண்டு துறவிகள் அதிலிருந்து குதித்ததாகவும் கூறப்படுகிறது. அவ்விருவரும் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளனர். அவ்விருவரும் குருநாகல் மருத்துவமனையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago