2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

”ஒரு பெரிய சத்தம் திடீரென்று கேட்டது”

Editorial   / 2025 செப்டெம்பர் 25 , பி.ப. 05:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

  " காட்டுப் பக்கத்திலிருந்து ஒரு பெரிய சத்தம் திடீரென்று,  கேட்டது. சிறிது நேரத்திலேயே, மடத்தில் இருந்து ஒரு சமிக்ஞை கொடுக்கப்பட்டது, அது அவசரநிலையைக் குறிக்கிறது. அதன் பிறகுதான் நாங்கள் அனைவரும் சம்பவ இடத்திற்குச் சென்றோம்," என்று உள்ளூர்வாசி ஒருவர் கூறினார்.

 குருநாகல், மெல்சிறிபுர நா உயன, ஆரண்ய சேனாசனவில் மடங்களுக்கு இடையே பயணித்த கேபிள் வண்டி, புதன்கிழமை (24) இரவு 9 மணியளவில் உடைந்து வீழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் பௌத்த  துறவிகள் ஏழுபேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அதில், பௌத்த  துறவிகள் 13 பேர் பயணித்துள்ளனர். மரணித்த துறவிகளில் வெளிநாடுகளைச் சேர்ந்த துறவிகளும் அடங்குகின்றனர். காயங்களுக்கு உள்ளான ஆறு துறவிகளும் குருநாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது என்றும் அறியமுடிகின்றத.

 மலை உச்சியில் உள்ள தியானக் குடில்களை நெருங்கும் போது இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பில், என்று உள்ளூர்வாசி ஒருவர் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தனர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .