2025 செப்டெம்பர் 25, வியாழக்கிழமை

அமைச்சர் சுனில் செனவி, சஜித்,மஹிந்த,ரணில் இரங்கல்

R.Tharaniya   / 2025 செப்டெம்பர் 25 , பி.ப. 04:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருநாகல், மெல்சிறிபுர நா உயன, ஆரண்ய சேனாசனத்தில் மடங்களுக்கு இடையே பயணித்த கேபிள் வண்டி உடைந்து வீழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் பௌத்த  துறவிகள் ஏழுபேர் உயிரிழந்த சம்பவத்துக்குஅரசாங்கம் மற்றும் பாராளுமன்றம் சார்பாக பௌத்த மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் டாக்டர் சுனில் செனவி தனது இரங்கலை பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25)  தெரிவித்தார்.

சபையில் உரையாற்றிய  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச,  இப்பெரும் துயரச் சம்பவத்தில் உயிரிழந்த சகல பிக்குகளுக்கும் எனது இரங்கலையும், வருத்தத்தையும் மற்றும் ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் பிக்குகள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கின்றேன்.

இப்பிக்குகள் சார்பாக அரசாங்கம் எடுத்துள்ள சகல நடவடிக்கைகளுக்கும் எமது ஒத்துழைப்பை நல்க தயார் என்றார். 

மெல்சிறிபுர நா உயன, ஆரண்ய சேனாசனத்தில் நடந்த துயர சம்பவம் குறித்து கேள்விப்பட்டு மிகவும் வருத்தமடைந்ததாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சமூக ஊடகப் பதிவில் தெரிவித்துள்ளார்.

"அந்த எதிர்பாராத விபத்தில் உயிரிழந்த உள்ளூர் மற்றும் வெளிநாட்டு துறவிகளுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 
பசுமையான மற்றும் அமைதியான சூழலில் தியானத்தில் ஈடுபட்டிருந்த இறந்த புத்த மகன்கள் மகா நிர்வாணத்தை அடைய பிரார்த்திக்கிறேன். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புத்த மகன்கள் விரைவில் குணமடையவும் பிரார்த்திக்கிறேன்," என்று மஹிந்த ராஜபக்ஷ அந்தப் பதிவில் தெரிவித்துள்ளார்.

விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் துறவிகள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். 

அவர்கள் இந்த உலகத்தின் துன்பத்தை முடிவுக்குக் கொண்டுவர காட்டிற்குச் சென்று, துறவிகளாக மாறி, புத்தர் போதித்த நிலையற்ற தன்மையை விளக்கிச் சென்றனர். அவர்கள் தேடிய பரிநிர்வாணத்தை அடைய பிரார்த்திக்கிறேன்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .