2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

அக்கரைப்பற்றில் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 04 , மு.ப. 09:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அக்கரைப்பற்றுப் பிரதேசத்தின்; வளத்தைச் சூறையாடி, அப்பிரதேச அபிவிருத்தியை சீர்குலைக்கும் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து இன்று வெள்ளிக்கிழமை பேரணி நடைபெற்றது.

முன்னாள் மாநகர மக்கள் பிரதிநிதிகளின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இப்பேரணியானது ஜும்மாத் தொழுகையின் பின்னர் ஆரம்பமாகியது. அக்கரைப்பற்றுப் பட்டினப் பள்ளிவாசலுக்கு முன்பாக ஆரம்பமாகி  பிரதேச செயலகம்வரை சென்றதுடன்,  பிரதேச செயலாளர் ஏ.எம்.அப்துல் லத்தீப்பிடம் அக்கரைப்பற்று முன்னாள் மாநகர மேயர் அதாவுல்லா அகமட் ஜக்கி மகஜரைக் கையளித்துள்ளார்.

இது தொடர்பில் முன்னாள் மாநகர மேயர் அதாவுல்லா அகமட் ஜக்கி தெரிவிக்கையில், 'அக்கரைப்பற்று மாநகரசபை அபிவிருத்தித் திட்டமிடலுடனும் அழகிய தோற்றத்துடனும் முன்மாதிரியாக திகழ்கின்றது.  

அக்கரைப்பற்று மாநகரத்துக்கென்று முழுமையான திட்டமிடலுடன் மாநகரப் பூங்கா, அதனோடு இணைந்த சிற்றுண்டிச்சாலை தீயணைப்புப் பிரிவு, நூதனசாலை, அக்கரைப்பற்று மைதானத்துக்கு செல்லும் பாதை முகப்பு,  பூங்காவினுடைய முகப்பு என்று முறையான வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வந்துள்ளன. இவ்வேளையில் நூதனசாலையும் பூங்காவினுடைய முகப்பும் சுற்றுவட்டத்தினுடைய வேலைகளும் பூர்த்தியாவதற்கு முன்னர் எமது அதிகாரம் கைநழுவிப்போயுள்ளது.

இதைச் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு, அக்கரைப்பற்றுக்கு எதுவுமே செய்யாதவர்களும் அக்கரைப்பற்றின் வளர்ச்சியையும் அதன் கனவுகளையும் நினைத்துக்கூட பார்க்க முடியாதவர்களும் இன்று அக்கரைப்பற்றின் மிகமுக்கியமான பெறுமதி வாய்ந்த வளத்தையும் காணிகளையும் சூறையாடி முறையான திட்டமிடலின்றி குறுகிய சிந்தனையுடன் செயற்பட்டு வருவதனை அனுமதிக்க முடியாது' என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X