2025 செப்டெம்பர் 26, வெள்ளிக்கிழமை

ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில்: இந்தியா - இலங்கை இன்று மோதுகின்றன

Editorial   / 2025 செப்டெம்பர் 26 , மு.ப. 11:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடரின் சூப்​பர் 4 சுற்​றின் கடைசி ஆட்​டத்​தில் இன்று இரவு இந்​தியா - இலங்கை அணி​கள் துபா​யில் மோதுகின்​றன.

ஆசிய கோப்பை டி20 கிரிக்​கெட் தொடர் ஐக்​கிய அரபு அமீரகத்​தில் நடை​பெற்று வரு​கிறது. 8 அணி​கள் கலந்து கொண்​டுள்ள இந்த தொடர் இறு​திக்​கட்​டத்தை நெருங்கி உள்​ளது. சூப்​பர் 4 சுற்​றில் முதல் இரு ஆட்​டங்​களி​லும் வெற்றி பெற்ற சூர்​யகு​மார் யாதவ் தலை​மையி​லான இந்​திய அணி இறு​திப் போட்​டிக்கு தகுதி பெற்று விட்​டது.

சூப்​பர் 4 சுற்​றில் இந்​திய அணி தனது முதல் ஆட்​டத்​தில் 6 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் பாகிஸ்​தானை தோற்​கடித்து இருந்​தது. நேற்று முன்​தினம் நடை​பெற்ற 2-வது ஆட்​டத்​தில் வங்​கதேச அணியை 41 ஓட்டங்கள் வித்​தி​யாசத்​தில் வீழ்த்​தி​யிருந்​தது. இந்​நிலை​யில் சூப்​பர் 4 சுற்​றின் கடைசி ஆட்​டத்​தில் இந்​திய அணி இன்று இலங்​கை​யுடன் மோதுகிறது. இந்த ஆட்​டம் இரவு 8 மணிக்கு துபா​யில் நடை​பெறுகிறது.

சரித் அசலங்கா தலை​மையி​லான இலங்கை அணி 2 ஆட்​டங்​களில் தோல்வி அடைந்து இறு​திப் போட்​டிக்கு முன்​னேறும் வாய்ப்பை இழந்​து​விட்​டது. அந்த அணி வங்​கதேசத்​திடம் 4 விக்​கெட்​ வித்​தி​யாசத்​தி​லும், பாகிஸ்​தானிடம் 5 விக்​கெட்​ வித்​தி​யாசத்​தி​லும் தோல்வி அடைந்​திருந்​தது. இன்​றைய ஆட்​டம் இறு​திப் போட்​டிக்​கான சிறந்த பயிற்​சி​யாக இந்​திய அணிக்கு அமையக்​கூடும்.

இறு​திப் போட்​டிக்கு தகுதி பெற்​று​விட்​ட​தால் இந்​திய அணி​யில் சில மாற்​றங்​கள் இருக்க வாய்ப்பு உள்​ளது. விக்​கெட் கீப்​பர் பேட்​ஸ்​மே​னான சஞ்சு சாம்​சனுக்கு பதிலாக ஜிதேஷ் சர்​மாவுக்கு வாய்ப்பு வழங்​கப்​படக்​கூடும். அதேவேளை​யில் ஜஸ்​பிரீத் பும்​ரா​வுக்கு ஓய்வு கொடுக்க வாய்ப்பு உள்​ளது. இது ஒரு​புறம் இருக்க நடப்பு தொடரில் இந்​திய அணி​யின் பீல்​டிங்​கில் தொய்வு ஏற்​பட்​டுள்​ளது. மொத்​தம் 10 கேட்ச்​களை தவற​விட்​டுள்​ளனர். இதில் வங்​கதேச அணிக்கு எதி​ராக தவற​விட்ட 4 கேட்ச்​களும் அடங்​கும். இறு​திப் போட்டி வரும் ஞாயிற்​றுக்​கிழமை நடை​பெற உள்​ளது. இதனால் பீல்​டிங்​கில் இந்​திய அணி கூடு​தல் கவனம் செலுத்​து​வ​தில்​ முனைப்​பு ​காட்​டக்​கூடும்​.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .